ஆப்பிள் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆனால் சில பக்க விளைவுகளும் உள்ளன. அவை என்னவென்று பார்ப்போம்.

ஆப்பிள்களில் இயற்கையான சர்க்கரைகள் உள்ளன. இவற்றை அதிகமாக சாப்பிட்டால் உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்.

குறிப்பாக ஆப்பிள்களை சாறு வடிவில் எடுத்துக் கொண்டால் ரத்த சர்க்கரை அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம்.

ஆப்பிளை அதிகமாக உட்கொண்டால், வாயு, வயிற்று வீக்கம், பிடிப்பு, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் வரலாம்.

பூச்சிக்கொல்லி மருந்துகள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட ஆப்பிள்களை சாப்பிட்டால் சில உடல்நலப் பிரச்னைகள் ஏற்படும்.

ஆப்பிளை சாப்பிட்டவுடன் வாயை கழுவ வேண்டும். இல்லையென்றால், பல் பிரச்னைகள் வர வாய்ப்புள்ளது என்று சொல்கிறார்கள்.

சிலருக்கு ஆப்பிள்கள் அலர்ஜியை ஏற்படுத்தும். உங்களுக்கும் அப்படிப்பட்ட தொந்தரவுகள் இருந்தால் சாப்பிடாமல் இருப்பதே நல்லது.

ஆப்பிளில் கலோரிகள் குறைவாக இருக்கும். ஆனால் அதிகமாக சாப்பிட்டால் எடை அதிகரிக்கும்.

இது வெறும் புரிதலுக்காக மட்டுமே. குறைவாக எடுத்துக் கொண்டால் நல்ல பலன்களை பெறலாம்.