குளிர்பானங்கள், சோடாக்கள் மற்றும் பழச்சாறு பாக்கெட்டுகளில் இனிப்புகள் அதிகளவு இருக்கும். இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
உடலுக்கு மிகவும் தீங்கானது இந்த மது. கல்லீரல், குடலை கடுமையாக பாதிப்பதுடன் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை மோசமாக பாதிக்கும் தன்மை மதுவிற்கு உண்டு.
அதிக உப்பு, ஆரோக்கியமற்ற எண்ணெய்கள், சுத்திகரிக்கப்பட்ட மாவு ஆகியவற்றால் செய்யப்படும் இந்த பாக்கெட்டில் அடைக்கப்பட்ட சிப்ஸ், பிஸ்கட் போன்றவை நீரிழிவு நோயாளிகளுக்கு ஆரோக்கியமற்றது.
பால், கிரீம், வெண்ணெய், நெய் போன்றவற்றில் ஏராளமான கொழுப்புகள் உள்ளது. இது இன்சுலினில் மோசமான பாதிப்பை உண்டாக்கும்.
வெள்ளை ப்ரெட், சாதம் மற்றும் பாஸ்தா போன்ற சுத்திகரிக்கப்பட்ட உணவுகளில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் குளுக்கோஸாக மாறி ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்து ஆகும்.
சர்க்கரை வியாதிகள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய ஒன்றாக சாக்லேட், கேக்குகள் உள்ளது. இதனால், சர்க்கரையின் அளவு பன்மடங்கு அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
சர்க்கரை அதிகமாகவும், நார்ச்சத்து குறைவாகவும் உள்ள காலை உணவுகள் நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்தது அல்ல.
பதப்படுத்தப்பட்ட இறைச்சியில் உள்ள கொழுப்புகள் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு ஆரோக்கியமற்றது ஆகும். இதய பாதிப்பை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
எண்ணெயில் வறுக்கப்பட்ட உணவுகள் ஆரோக்கியமற்றதாக உள்ளது. ஃப்ரெஞ்ச் ப்ரைஸ், பொறித்த கோழி, பக்கோடா போன்றவை இன்சுலின் உணர்திறனை மோசமாக்கும்.
சுவையூட்டப்பட்ட தயிர், ஐஸ்கிரீமில் சர்க்கரையின் அளவு அதிகம் ஆகும். நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவை பாதிக்கும் திறன் இதற்கு உண்டு.