நிம்மதியான வாழ்க்கைக்கு 8 பொன்னான விதிகள்; நிச்சயம் நல்லாருப்பீங்க!

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

சமநிலையான வாழ்க்கைக்கான 8 பொன்னான விதிகளை (8 Golden Rules of Life) பின்பற்றிப் பாருங்கள். வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். என்னென்ன விதிகள்?

ரசியுங்கள்; ஆனால் பற்று கொள்ளாதீர்கள்:

உறவுகளிடம் அன்பையும் பாசத்தையும் செலுத்துங்கள். அதேசமயம், அவர்களை உணர்வுபூர்வமாகச் சார்ந்திருப்பதைத் தவிர்த்து, சுயமாகச் சிந்திக்கப் பழகுங்கள்.

சுயமரியாதை முக்கியம் பாஸ்!

எவ்வளவு நெருக்கமான உறவாக இருந்தாலும் சரி, அவர்களுக்காக உங்களின் தனித்துவத்தையும், சுயமரியாதையையும் ஒருபோதும் விட்டுக் கொடுக்காதீர்கள். உங்களின் மதிப்பை நீங்கள் முதலில் உணருங்கள்.

கவனியுங்கள், ஜட்ஜ் செய்யாதீர்கள்:

மற்றவர்கள் பேசுவதைக் காதுகொடுத்துக் கேளுங்கள். ஆனால் அது அவர்களுக்குப் பதிலடி கொடுக்கவோ, அவர்களை எடைபோடவோ இல்லாமல், உணர்வுகளைப் புரிந்துகொள்ளக் கேட்பதாக இருக்கட்டும்.

மனிதர்களை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள்:

உங்களைச் சுற்றியுள்ள மனிதர்களின் சுபாவங்களை உள்ளதை உள்ளபடியே ஏற்றுக்கொள்ளப் பழகுங்கள். அவர்களை மாற்ற முயற்சிக்காதீர்கள்.

ஏற்றுக்கொள்ளுங்கள்; ஆனால் முடங்கிவிடாதீர்கள்:

தற்போதைய சூழ்நிலையை ஏற்றுக்கொண்டாலும், அதிலேயே திருப்தி அடைந்து தேங்கிவிடக் கூடாது. உங்களின் அடுத்தகட்ட வளர்ச்சிக்காகத் தொடர்ந்து கடினமாக உழையுங்கள்.

கொடுங்கள், ஆனால் எதிர்பார்க்காதீர்கள்:

மற்றவர்களுக்கு நீங்கள் செய்யும் சின்னச் சின்ன உதவிகளுக்கும் காட்டும் அன்புக்கும், பிரதிபலனை எதிர்பார்க்காதீர்கள். அதுவே நிம்மதி தரும்.

கருணையோடு இருங்கள்; ஆனால் கண்மூடித்தனமாக அல்ல:

எல்லோரிடமும் கருணையோடு பழகுங்கள். ஆனால், அந்த இரக்க குணம் உங்களைப் பயன்படுத்திக்கொள்ளவோ, ஏமாற்றிவிடவோ ஒருபோதும் அனுமதிக்காதீர்கள்.

வாழ்க்கையை நிம்மதியாகவும், பக்குவமாகவும் வாழ இந்த விதிகள் பெரிதும் உதவும்