50 வயதுக்கு மேற்பட்டவரின் மனநிலை எப்படி இருக்கும் தெரியுமா? 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் வாழ்க்கையில் அதிக அனுபவங்களைப் பெற்றுள்ளனர் நல்லது கெட்டது என அனைத்துமே அவர்களுக்குத் தெரிந்திருக்கும் இவர்கள் தங்களது தொழிலில் ஒரு நல்ல நிலையை அடைந்து, ஓய்வு காலத்திற்காக பணத்தை சேமித்து வைத்திருப்பார்கள் இந்த அனுபவங்கள் அவர்களுக்கு வாழ்க்கையைப் பற்றிய ஆழமான புரிதலைக் கொடுத்து மகிழ்ச்சியாக இருக்க உதவுகிறது வாழ்க்கையின் ஆரம்ப காலக்கட்டத்தில் உடம்பை சரியாக பார்த்துக்கொள்ளவில்லை என்றால் உடல் ரீதியான பிரச்சினைகள் ஏற்படும் உயர் இரத்த அழுத்தம், இதயப் பிரச்சனைகள் மற்றும் நீரிழிவு போன்றவை ஏற்படலாம் இது அவர்கள் விரும்பும் பொழுதுபோக்கு செயல்பாடுகளில் ஈடுபடுவதை கடினமாக்குகிறது