மனோரமா பிறந்தநாளான இன்று அவர் கடந்து வந்த பாதையை Recap செய்து பார்க்கலாம். தஞ்சையை பூர்வீகமாக கொண்ட கோபிசாந்தா பின்னர் மனோரமாவாக மாறினார் சிறு வயதில் நாடகத்தில் நடிக்க ஆரம்பித்தார். நாடக இயக்குநர் திருவேங்கடம், தியாகராஜன் ‘மனோரமா’ என பெயர் வைத்தார்களாம். முதலாவதாக நடித்த சிங்கள திரைப்படம் வெளியாகவில்லை. ’மாலையிட்ட மங்கை’ திரைப்படமே மனோரமாவின் அறிமுகப்படமாக அமைந்தது. ’வா வாத்யாரே வூட்டாண்டே’ உள்ளிட்ட பல பாடல்களை பாடியுள்ளார் 1500க்கும் மேலான படங்களில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். 1964-ல் ராமநாதன் என்பவரைக் திருமணம் செய்த 2 ஆண்டுகளில் பிரிந்தார். ஓயாது உழைத்த நடிகை மனோரமா! கடந்த 2015 ஆம் ஆண்டு உடல்நல குறைவால் காலமானார்