உணவு வகையில் தினை மிகவும் சிறந்த பயன்களை கொண்ட உணவாக உள்ளது. தினை உணவிலுள்ள சில முக்கியமான பயன்கள் என்னென்ன? தினையில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் இது குழந்தைகளுக்கு மிகவும் நல்ல உணவாக அமைந்துள்ளது. குழந்தைகள் வேகமாக வளர தினையிலுள்ள நார்ச்சத்து முக்கியமாக பயனளிக்கிறது. தினையில் அதிகளவில் கால்சியம் மற்றும் மேக்னீஷியம் உள்ளதால் இது எலும்புகளுக்கு அதிக சத்தை தரும். தினையில் ஆன்டி ஆக்ஸிடன்ட் உள்ளதால் இது நமக்கு எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. அத்துடன் தினையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் நம்முடை சருமத்திற்கு பொழிவு அளிக்கிறது. தினையில் குளூடன் என்ற புரோத சத்து இல்லாததால் அதை பலர் நிச்சயம் உட் கொள்ளலாம். தினையிலுள்ள நார்ச்சத்து நம்முடைய ரத்தத்தில் இருக்கும் கேட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது. தினையிலுள்ள பொட்டாசியம் நம்முடைய சிறுநீரகம் சரியாக பயன்பட உதவும் வகையில் அமைந்துள்ளது.