தென் தமிழகத்தில் புகழ்பெற்ற குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா நேற்று நடைபெற்றது இதனை முன்னிட்டு பல பக்தர்கள் கோயிலில் குவிந்தனர் இந்துக்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்று நவராத்திரி திருவிழா துர்க்கை அம்மன் தர்மத்தை மீட்டெடுக்கும் பொருட்டு மகிஷாசுரனை வதம் புரிந்த நாளாக புராணங்கள் தெரிவிக்கின்றன இந்தியாவில் கர்நாடகா மாநிலம் மைசூருவில் நடைபெறும் தசரா திருவிழா உலகப்புகழ் பெற்றது தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தின் குலசேகரப்பட்டினத்தில் கொண்டாடப்படும் தசரா திருவிழா மிகவும் பிரபலமானது மகிஷா சூரசம்ஹாரம் நேற்று (அக்டோபர் 24) இரவு 12 மணிக்கு நடைபெற்றது பல்வேறு விதமான வேடங்கள் தரித்து விரதம் இருந்த மக்கள் காணிக்கை செலுத்தினர் சுவாமி வேடங்கள் மட்டுமல்லாது விலங்குகள், அரச பரம்பரை, போலீஸ், யாசகம் பெறுபவர் போன்ற பலவிதமான வேடங்களில் கலக்கினர் சூரசம்ஹார நிகழ்வில் மகிஷாசூரனை முத்தாரம்மன் வதம் செய்யும் காட்சிகள் குலசேகரப்பட்டினம் கடற்கரையில் நடைபெற்றது