பிட் ஆக விரும்புவர்களுக்கு கொம்புச்சா டீ நல்ல சாய்ஸ்! கொம்புச்சா டீயில் நல்ல பாக்டீரியாக்கள் உள்ளன. இது செரிமான சக்தியை அதிகரிக்கிறது. கிரீன் டீயில் உள்ள நன்மைகள் கொம்புச்சா டீயிலும் கிடைக்கிறது. தொடர்ந்து இதை அருந்துவதால், உடலில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்குகிறது. இதில் அதிக ஆண்டி பாக்டீரியள் சக்தி உள்ளது. உலக அளவில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பது கேன்சர். அந்த கேன்சர் செல்களை வளர விடாமல் கொம்புச்சா டீ பாதுகாப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உங்கள் டயட்டில் கொம்புச்சா டீயை சேர்த்து கொள்ளுங்கள்.