கோலிவுட்டின் கிங் உலக நாயகன் கமல் ஹாசன் இவருக்கு பெரியளவில் ரசிகர் பட்டாளம் உள்ளது சமீபத்தில் இவர் நடித்த 'விக்ரம்' படம் மிகப்பெரிய ஹிட் ஆனது கோவையில் 'விக்ரம்' படத்தின் 100-வது நாள் விழா கொண்டாடப்பட்டது இதில் ஏராளமான கமல் ரசிகர்கள் கலந்து கொண்டனர் நடிகர் கமல் ஹாசன் இந்நிகழ்ச்சிக்கு வருகை புரிந்தார் அவருக்கு சிறப்பு வரவேற்புகள் அளிக்கப்பட்டது இதில் கலந்து கொண்ட அவர், ரசிகர்களிடையே உரையாற்றினார் அப்போது, ‘நல்ல படங்களை நீங்கள் கைவிடக்கூடாது’ என கோரிக்கை வைத்தார் ‘வெற்றியை அனைவரும் சேர்ந்து கொண்டாடுவது சிறந்த திரைப்படங்கள் எடுக்க உத்வேகமாக அமையும்’ என்றும் கூறினார்