காஜல் அகர்வால் கல்லூரி காலத்தில் மாடலிங் செய்து வந்தார். திரைத்துறைக்கு வரும் முன்னே அவர் மிகவும் பிரபலமானவர்.



இவர் பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தவர்.



காஜலுக்கு ஐத்ராபாத் பிரியாணி என்றால் அவ்வளவு பிரியம்.



ஃபிட்னஸில் அதிக கவனம் கொண்டவர். அதே சமயம் உணவிலும் சமரசம் செய்ய மாட்டார்.



பாரம்பரிய உடைகள் மீது அதிக விருப்பம் இருந்தாலும், ஜீன்ஸ், டீ-ஷர்ட் தான் காஜல் அடிக்கடி உடுத்தும் உடை.



கியூன் ஹோ காயா நா எனும் ஐஸ்வர்யா ராய் - விவேக் ஓபராய் நடித்த திரைப்படத்தில், ஐஸ்வர்யா ராயின் தோழியாக நடித்திருந்தார். இது தான் காஜல் அகர்வாலின் முதல் இந்தி திரைப்படம்.



நீச்சல் பிடிக்கும். இதன் மூலமே அவர் ஃபிட்னஸை மெயிடேய்ண் செய்கிறார்.



என்னதான் பிஸியாக இருந்தாலும், அதிகாலை 5 மணிக்கு எழும் பழக்கம் கொண்டிருக்கிறார்.



தற்போது குழந்தை நீல் கிச்லுவுடன் மகிழ்ச்சியாக இருக்கிறார்.



இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் காஜல் .