நடிகர் ஜெயம் ரவியின் 33வது படம் குறித்த தகவல் வந்துள்ளது



கிருத்திகா உதயநிதி இயக்கவுள்ளார்



ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது



ஜெயம் ரவியின் ஜோடியாகிறார் நடிகை நித்யா மேனன்



முதல் முறையாக இவர்கள் இப்படம் மூலம் இணைகிறார்கள்



'வணக்கம் சென்னை' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கிருத்திகா உதயநிதி



பேப்பர் ராக்கெட் என்ற வெப் சீரிஸையும் இயக்கியுள்ளார்



வரும் அக்டோபர் மாதம் JR33 படப்பிடிப்பு தொடங்க உள்ளது என்றும் தகவல் பரவி வருகிறது



ஜெயம் ரவி JR30, சைரன், ஜீனி, இறைவன் ஜன கன மன படங்களில் பிஸியாக உள்ளார்



கடைசியாக நித்யா மேனன் நடிப்பில் 'திருச்சிற்றம்பலம்' வெளியானது