கார்த்திகை மாதத்தில் ஜயப்பனுக்கு மண்டல விரதம் இருப்பது சிலரின் வழக்கமாக உள்ளது



இக்கோயிலின் சிறப்பு அம்சங்களை இங்கு காணலாம்..



சபரிமலையில் மகிஷாசூரனின் தங்கையான மகிஷியை, ஐயப்பன் கொன்றார் என்பது நம்பிக்கை



18 மலைகளுக்கு மத்தியில் அமைந்துள்ள இக்கோயில் 18 படிக்கட்டுகளை கொண்டது



கருப்பு துணி, அனைத்தையும் துறந்த மனநிலையை குறிப்பதால் அது ஐயப்பன் பக்தர்களால் அணியப்படுகிறது



இக்கோயிலுக்கு வருவதற்கு முன் 41 நாள் விரதம் மேற்கொள்ள வேண்டும்



புனித யாத்திரைக்காக லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இடம் இது



கோயிலின் நடையை சாத்துவதற்கு முன் ஹரிவராசனம் தினமும் பாடப்படுகிறது



இக்கோவிலில் அரவண பாயசம் பிரசாதமாக வழங்கப்படுகிறது



சபரிமலை கோயிலுக்கு அருகில் வாவர் என்ற மசூதி உள்ளது