பக்ரீத் , உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை இந்த பண்டிகை தியாகத் திருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது இஸ்லாமியர்களின் தூதுவராக நம்பப்படுபவர்களில் ஒருவர் இப்ராஹிம் இப்ராஹிம் நபிகளாரின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக கொண்டாடப்படுவதே பக்ரீத் இப்ராஹிமின் மகனான இஸ்மாயீலை பலியிடுமாறு இறைவன்,கனவின் மூலம் கட்டளையிட்டார் கேப்ரியல் என்னும் வானவரை அனுப்பிய இறைவன் அந்நிகழ்வை தடுத்து ஒரு ஆட்டை இறக்கிவைத்தார் இஸ்மாயீலுக்கு பதில் அந்த ஆட்டை அறுத்து பலியிடுமாறு இப்ராஹிமிற்கு கட்டளையிட்டார் இந்த சம்பவத்தின் அடிப்படையிலேயே தியாகதிருநாள் கொண்டாடப்படுகின்றது இப்ராஹிமின் தியாகத்தை நினைவு கூரும் வகையில், இஸ்லாமியர்கள் சிறப்புத்தொழுகைகள் செய்வார்கள் மாடு, ஆடு வெட்டி சமைத்து, அதனை அனைவருக்கும் பகிர்ந்து கொடுப்பதே பக்ரீத்