குமரி கண்டம் என ஒரு கண்டம் இருந்ததாக சொல்லப்படுகிறது நமது பழம்பெரும் இலக்கியங்களில் ஆங்காகே, அவ்வப்போது வந்து செல்லும் ஒரு வார்த்தை குமரி இன்று உலக அகழ்வாராய்ச்சியாளர்களால் லெமுரியா என்றழைக்கப்படும் கண்டம் இது ஏறத்தாழ இருபதாயிரம் முதல் நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் அழிந்ததாகக் கூறப்படுகிறது இங்கு பல உயிரினங்கள் தோன்றியதாக சொல்லப்படுகிறது முச்சங்கம் வளர்க்கப்பட்ட இடம் தேனிக்கு அருகாமையில் இருக்கும் மதுரை அல்ல என்று சிலர் கூறுகின்றனர் குமரிக் கண்டத்தின் மிக முக்கியமான தலைநகராக திகழ்ந்து கொண்டிருந்த மாபெரும் நகர் மதுரை அந்த மதுரை மாநகரத்தில்தான் தமிழ் முச்சங்கம் வளர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது இடது பக்கம் ஆப்ரிக்கா, வலது புறம் ஆஸ்திரேலியா, மேல்புறம் ஆசிய போன்ற கண்டங்கள் இணைந்து இருந்ததாம் அடுத்தடுத்து ஏற்பட்ட பேரழிவுகளினால் இந்திய பெருங்கடலில் மூழ்கிப் போனதாக சொல்லப்படுகிறது