கால்பந்துப் போட்டியின்போது கலவரம் வெடித்த மைதானம்



இடிக்கப்பட்டு பாதுகாப்பு மற்றும் முறையான வசதிகளுடன் மீண்டும் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



இந்தோனேசியாவில் கடந்த அக்டோபர் 2ஆம் தேதி கால்பந்து போட்டிக்கு நடுவே கலவரம் வெடித்ததில் 133 பேர் உயிரிழந்தனர்.



விளையாட்டு அரங்கில் நிகழ்ந்த மிக மோசமான கலவரமாக இது கருதப்படுகிறது.



கிழக்கு ஜாவா, மலாங்கில் உள்ள கஞ்சுருஹான் ஸ்டேடியத்தில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்த நிலையில்,



இந்தக் கால்பந்து மைதானம் இடிக்கப்பட்டு மீண்டும் கட்டப்படும் என இன்று அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோ தெரிவித்துள்ளார்.



இரு தரப்பினர் மோதிக்கொண்டதில் 180க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



இந்தோனேசியா கால்பந்து சங்கம் (PSSI) இந்தச் சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது.



பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடமும் அனைத்து தரப்பினரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.



இந்தோனேசியா கால்பந்து சங்கம் உடனடியாக ஒரு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.