இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர்.



இவரது தலைமையில் இந்திய அணி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.



செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீராங்கனை என்ற விருதை ஹர்மன்பிரீத்கவுர் பெற்றுள்ளார்.



இந்த விருதை வென்ற ஹர்மன்பிரீத் கவுர் கூறியிருப்பதாவது, இந்த விருதுக்கு என்னை பரிந்துரைத்ததே மிகவும் சிறப்பாக இருந்தது.



இந்த விருதை வென்றது அற்புதமான உணர்வாக உள்ளது.



ஹர்மன்பிரீத் கவுர் 124 ஒருநாள் போட்டிகளில் 5 சதங்களும், 17 அரைசதங்களும் விளாசியுள்ளார்.



ஒருநாள் போட்டிகளில் மட்டும் 3 ஆயிரத்து 322 ரன்கள் எடுத்துள்ளார்.



135 டி20 போட்டிகளில் ஆடி 1 சதம் மற்றும் 8 அரைசதங்களுடன் 2 ஆயிரத்து 647 ரன்கள் விளாசியுள்ளார்.



3 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 38 ரன்கள் எடுத்துள்ளார்.



வாழ்த்துக்கள்