'5 விக்கெட்' அக்சர் பட்டேல் நடப்பாண்டில் இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற டெஸ்ட்டில் தான் அறிமுகமானார் 27 வயதான அக்சர் பட்டேல். தற்போது தான் தனது 4வது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார். ஆனால் அதற்குள் அக்சர் 5 முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இதன்மூலம் குறைந்த டெஸ்டில் 5 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமையை பெறுகிறார் அக்சர் பட்டேல் உலக அளவில் இந்த சாதனையை நிகழ்த்திய நான்காவது வீரர் என்ற பெருமையும் இவர் வசமானது