1996ல் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன் படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது இதன் 2 ஆம் பாகம் ஷூட்டிங் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது படப்பிடிப்பு விபத்து, ஷங்கர் - லைகா நிறுவனம் மோதலால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது இந்த பிரச்சனையில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் தலையீட்டு தீர்த்து வைத்தார் 70% ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் மீதமுள்ள 30% ஷூட்டிங் இன்று மீண்டும் தொடங்கியுள்ளது இந்த படத்தில் நடிகைகள் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத்தி சிங், பிரியா பவானி ஷங்கர் ஆகியோர் நடிக்கின்றனர் முதல் பாகத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த நிலையில் இந்தியன் 2-விற்கு அனிருத் இசையமைக்கிறார் தற்போதைய ஷூட்டிங்கில் முதலில் கமல் இல்லாத காட்சிகள் படமாக்கப்பட்ட உள்ளது. இந்த படத்தில் நடிகர் விவேக் கேரக்டரில் குரு சோமசுந்தரம் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது லைகா நிறுவனத்துடன் இணைந்து தற்போது ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரிக்கிறது