பொது சேவை சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளிலும் சாதனைகளைப் புரிந்தவர்களை” அங்கீகரிக்கும் நோக்கத்துடன் தரப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் பிரதமரால் குழு அமைக்கப்பட்டு அந்த குழுவின் பரிந்துரையால் குடியரசு தலைவர் மூலம் விருதுகள் வழங்கப்படுகின்றன.
பத்ம விபூஷன்,பத்ம பூஷன், பத்மஸ்ரீ என மூன்று வகையான பத்ம விருதுகள் உள்ளது.
இனம்,தொழில்,பதவி ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைத்து இந்திய குடிமகனும் இந்த விருதுகளுக்குத் தகுதியுடையவர்.
கலை,சமூக சேவை,அறிவியல்,பொறியியல், வர்த்தகம்,தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் விளையாட்டு போன்ற எந்தத் துறையிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படலாம்.
ஒவ்வொரு ஆண்டும் 120 விருதுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஒரு தனிநபரின் வாழ்நாள் சாதனையை கருத்தில் கொண்டு வழங்கப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது.
இந்த விருதுகள் பணப்பரிசு கிடையாது,குடியரசுத் தலைவரால் கையொப்பமிடப்பட்ட சான்றிதழ் மற்றும் பதக்கமாகவே வழங்கப்படும்.