இந்திய இளம் படை நியூசிலாந்துக்கு பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டியில் விளையாடி வருகின்றனர் முதலாம் போட்டி மழையால் தடைபட, இரண்டாம் போட்டியில் இந்தியா 65 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் டிம் சவுதி பேட்டிங் தேர்வு செய்தார் ஹர்ஷ்தீப் சிங்கின் பந்து வீச்சில் 3 ரன்களில் ஆட்டமிழந்தார் ஃபின் ஆலன் ஐந்து ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 44 ரன்கள் குவித்துள்ளது நியூசிலாந்து அணி அதிராடியாக ஆடிவந்த சாம்ப்மனை, முகமது சிராஜ் வெளி அனுப்பினார் நியூசிலாந்து அணி 19.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 160 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்திய அணிக்கு 161 ரன்கள் இலக்காக நிர்ணயம் 9 ஓவரில் இந்திய அணி 75 ரன்கள் அடிக்க, மழையால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது இவர்களுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி மழையால் டை ஆன நிலையில், இந்தியா தொடரை 1-0 என்ற கணக்கில் வென்றுள்ளது