1988-ம் ஆண்டு மும்பையில் பிறந்த அஜாஸ் தனது
8 வயதில் குடும்பத்துடன் நியூசிலாந்துக்கு குடிப்பெயர்ந்தார்.


2018-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில்
விளையாடியதன் மூலம் டி20, டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.


இடதுகை சுழற்பந்து வீச்சாளரான அஜாஸுக்கு தனது கிரிக்கெட் பயணத்தில்
மும்பை டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மறக்க முடியாததாக அமைந்திருக்கிறது.


முதல் முறை சொந்த ஊரில் களமிறங்கிய அஜாஸ் படேலுக்கு மும்பையில்
இருந்த அவரது குடும்பத்தினர் மைதானத்துக்கு நேரடியாக வந்து உற்சாகம் அளித்தனர்


மும்பையில் தான் பிறந்து வான்கடேவில் 10 விக்கெட்டுகளை
எடுத்த அஜாஸுக்கு இது ஒரு சிறப்பான டெஸ்ட் இன்னிங்ஸ்!


போட்டி தொடங்கும் முன்பு பேசிய அஜாஸ், மும்பையில்
தரை இறங்கியபோது மிகவும் எமோஷ்னலாக உணர்ந்தேன்.


நிறைய முறை விடுமுறையின்போது மும்பை வந்திருக்கிறேன்.



ஆனால், டெஸ்ட் போட்டி விளையாடுவதற்காக மும்பை வந்து
இறங்கியது வித்தியாசமான அனுபவத்தை கொடுத்தது.


இப்பொழுது, நான் நியூசிலாந்துக்காக
விளையாட வந்திருக்கிறேன்” என தெரிவித்தார்.


மும்பை to நியூசி -அஜாஸ் பயணம்..
இந்தியா - நியூசிலாந்து 2021, பெஸ்ட் பௌலிங் 10/119