இந்தியாவில் உள்ள பெண்களில் 56 சதவீதத்திற்கும் அதிகமானோர் இதயநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



கருப்பை உற்பத்தி செய்யும் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவதால், இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வருகிறதாம்.



பெண்களுக்கு மாரடைப்பு அதிகளவில் ஏற்படும் அபாயம் உள்ளதாக தகவல்.



இதய நோய் மற்றும் மாரடைப்பை தடுக்கும் முறைகள் குறித்து இங்கே தெரிந்துகொள்வோம்.



உடல் எடையை முறையாக பராமரிக்க வேண்டும்.



முறையான இதயம் சம்பந்தப்பட்ட பரிசோதனை மற்றும் கண்காணிப்பு அவசியம்.



தினமும் 30- 45 நிமிடங்களுக்கு நடைபயிற்சி கட்டாயம்.



பாதாம், வால்நட், பிஸ்தா, சூரியகாந்தி மற்றும் சியா விதைகள் போன்றவற்றை உட்கொள்ள வேண்டும்.



கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவற்றை எப்போதும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.



அதிகமனஅழுத்தம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.