இசைஞானி இளையராஜா மதுரையில் உள்ள பண்ணையபுரத்தில் ஜூன் 02, 1943 அன்று பிறந்தார் இவர் 1977, 1980, 1981, 1988, 1989 ஆகிய ஆண்டுகளில் தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளை பெற்றுள்ளார் இவருக்கு 1983, 1985, 1988, 2009, 2016 ஆகிய ஆண்டுகளில் தேசிய விருது வழங்கப்பட்டது ராம ராஜியம் படத்திற்காக 2011 ஆம் நந்தி விருது கொடுக்கப்பட்டது 1994, 1996, 1998 ஆகிய ஆண்டுகளில் கேரளா அரசின் திரைப்பட துறைக்கான மாநில விருதுகள் கொடுக்கப்பட்டது இசைஞானிக்கு 1991, 2003, 2005 ஆகிய ஆண்டுகளில் பிலிம்பேர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன 2015-ல் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியத் திரைப்பட ஆளுமைக்கான நூற்றாண்டு விருதை பெற்றார். இந்திய அரசால் 2010-ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருதும், 2018- ஆம் ஆண்டு பத்ம விபூஷண் விருதும் வழங்கப்பட்டுள்ளது இந்தியாவின் இசை,நடனம்,நாடகக் கலைகளுக்கான தேசிய மன்றமான சங்கீத நாடக அகாடமியினால் 2013-ஆம் ஆண்டில் விருது பெற்றார் தற்போது அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதிவு வழங்கபட்டுள்ளது