முகத்திற்கும், சருமத்தினை புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்வதில் ஐஸ் கட்டி நல்ல பலன் தரும். முகப்பரு ஏற்படாமல் இருக்க வாரத்தில் அடிக்கடி ஐஸ் கட்டி மசாஸ் செய்யலாம். ஆய்லி ஸ்கின் இருப்பவர்கள் முகத்திற்கு ஐஸ் கட்டி வைத்துவந்தால் கொஞ்சம் நாட்களுக்கு பிறகு நல்ல பலன் தரும். வெயிலால் சருமத்தில் ஏற்படும் எரிச்சலுக்கு ஐஸ் கட்டி வைக்கலாம். ஐஸ் கட்டிகளால் முகத்திற்கு மசாஜ் செய்வது மூலம் முகத்தில் சுருக்கம் ஏற்படாது. சருமத்தில் இறந்த செல்களை புதுப்பிக்க உதவுகிறது. இன்ஸ்டண்ட் முகப்பொலிவுக்கு ஐஸ் கட்டி ஃபேசியல் சிறந்த சாய்ஸ்.. சீரான மேக்கப் வேண்டும் என்று நினைப்பவர்கள், மேக்கப் போடுவதற்கு முன், ஐஸ் கட்டி ஃபேசியல் செய்யலாம், சரும பராமரிப்பில் ஐஸ் கட்டி ஒரு சின்ன பங்கைதான் செய்யும். முழுவதுமாக ஐஸ் கட்டியை சரும பராமரிப்பில் முதன்மையானதாக பார்க்கக் கூடாது. முகப்பொலிவுற்கும் ஐஸ் கட்டி உதவும்.