சினேகாவுக்குப் பின் ஹோம்லி கதாப்பாத்திரங்களையே குறிவைத்து நடிப்பவர் ப்ரியா பவானி ஷங்கர்..! கல்யாணம் முதல் காதல் வரை எனும் தொலைக்காட்சி தொடரில் நாயகியாக நடித்து பிரபலமடைந்தவர்..! தொலைக்காட்சி தொகுபாளினியாக தனக்கென தனி இடத்தினை உருவாக்கினார்..! மேயாத மான் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்..! தமிழ் நன்றாக பேசத் தெரிந்த தமிழ் கதாநாயகிகளில் இவரும் ஒருவர்..! தன் நடிப்பில் எப்போதும் ‘பக்கத்து வீட்டுப் பெண்’ எனும் உண்ர்வினைத் தரக்கூடியவர்..! இவர் பி.டெக் படிப்பினை முடித்துள்ளார்..! தற்போது இவரது நடிப்பில் யானை திரைப்படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது..! டைம் என்ன பாஸ் எனும் வெப் சீரியஸ் இவர் நடிப்பில் தனிக் கவனம் பெற்றது..! இந்தியன் 2 படத்திலும் தற்போது நடித்து வருகிறார்..!