சமோசாவிற்கு இருக்கும் மவுசே தனி. வெங்காயம், உருளைக்கிழக்கு, பன்னீர் என பல வகை சமோசாவில் பல ரெசிபி செய்யலாம்



வீட்டில் சமோசா செய்யும் போது மொறு, மொறுவென இல்லை என கவலையா?.. இதோ எளிய வழி



சமோசா செய்ய மாவில் எண்ணெய் அல்லது நெய்யைக் கலந்ததும் உடனே பிசையக்கூடாது



தேவையான தண்ணீரை ஒரே நேரத்தில் சேர்க்காதீர்கள். மாவு மிக கடினமாகவோ, மென்மையாகவோ இருக்கக்கூடாது.



சமோசா தயார் செய்யும் வரை தயார் செய்யப்பட்ட மாவை ஈரத்துணியால் மூடி வைக்க வேண்டும்



மாவில் சேர்க்கப்படும் எண்ணெய் தான் சமோசாவை மிருதுவாக மாற்றும் என்பதால் அதிகம் உபயோகிக்கலாம்



சமோசா மாவிற்குள் நிரப்ப மசாலாப் பொருட்களுடன் உருளைக்கிழங்கை நன்கு பிசைய வேண்டும்



மாவினுள் ஸ்டஃப் செய்யப்பட்டதை வைத்த பின் அதனை மூட மைதா மாவை பசை போல மாற்றி பயன்படுத்தலாம்



மைதா மாவுடன் சிறிதளவு ரவையைச் சேர்ப்பதால் சமோசாவின் சுவை அதிகரிக்கும்



இப்போது சூடான மற்றும் சுவையான மொறு, மொறு சமோசா ரெடி...!