கெட்டி அவல் தேவையான அளவு எடுத்து 10-15 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைக்கவும்.



வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கவும்.



தாளிப்பதற்கு, பொடியாக நறுக்கிய இஞ்சி கடுகு, நிலக்கடலை, கருவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை தயார் செய்து வைக்கவும்.



கடாயில், தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு, மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை ஆகியவற்றை போட்டு வதக்கவும்.



இதனுடன் தோல் நீக்கிய வறுத்த நிலக்கடலையைச் சேர்க்கவும்.



பிறகு, வெங்காயம் சேர்த்தி வதக்கவும்.



வெங்காயம் நன்றாக வதங்கியதும் ஊற வைத்து வடிக்கட்டிய அவலை இதனுடன் சேர்க்கவும்.சிறது மஞ்சள் தூள் சேர்க்கவும்.



அவல் மற்றும் மசாலாவுடன் சேர்ந்து பொன்னிறமாக மாறும்வரை நன்கு கிளறவும்.



இதோடு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இழைகளைத் தூவி, சிறது எலும்பிச்சை பழச்சாறு சேர்ந்த்து கிளறி இறக்கவும். அவல் உப்புமா ரெடி.



சூடாக டீ உடன் சுட சுட அவல் உப்புமா சிறந்த காம்போ. டிரை பண்ணுங்க..