வாழையில், செவ்வாழை, மலை வாழை, கற்பூர வாழை, மட்டி வாழை, நேந்திர வாழை உள்ளிட்ட பல்வேறு வகைகள் உள்ளன. ஊட்டச்சத்து மிகுந்தது. மில்க் ஷேக், ஸ்மூத்தி செய்து குடிக்கலாம். ஒரு பிளெண்டரில் வாழைப்பழம், முந்திரி பாதாம், திராட்சை தேன் ஆகியவை சேர்த்து பேஸ்ட் போன்று அரைக்கவும். யோகர்ட் சேர்த்து நன்றாக கலக்கவும். இதில் பாலும் சேர்க்கலாம். எல்லா பழ வகைகளிலும் ஸ்மூத்தி தயாரிக்கலாம். எளிதாக செய்ய கூடியது ஸ்மூத்தி.. ஆரோக்கியம் நிறைந்ததும் கூட. ஜில்லென்றும் குடிக்கலாம்.