பழங்கள் மற்றும் காய்கறிகள் உடல் நலனுக்கு நல்லது. உடல், சரும ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள உதவும். கேரட் -கொத்தமல்லி ஜூஸ் கொலஜன் உற்பத்திக்கு உதவும் கேரட்டில் பீட்டா கரோட்டின் உள்ளது , இது சூரிய ஒளியில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவும். வைட்டமின் சி உங்கள் சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்தும். கேரட் மற்றும் கொத்தமல்லி சாறின் பண்புகள் உங்கள் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். காய்கறிகள் பழங்களை உங்கள் உணவில் தேவையான அளவு சேர்க்கவும். இதோடு ஆரஞ்சு, எலுமிச்சை சாறும் சேர்க்கலாம். உணவே மருந்து நாம் அறிந்ததுதானே!