ஒரு கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் நீளமாக வெட்டிய பேபி கார்ன், வெங்காயம்,குடைமிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும் மற்றொரு பாத்திரத்தில் தனியா, சீரகம், காய்ந்த மிளகாய் ,கருப்பு மிளகு வறுத்து மிக்ஸியில் பொடியாக அரைக்கவும் மீதமுள்ள எண்ணெயில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அரைத்த வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்க்கவும் பின் அதனுடன் மஞ்சள்தூள், அரைத்த மசாலா பொடி, முந்திரி விழுது, தயிர் சேர்த்து கிளறவும் இப்போது அதனுடன் முன்பு வதக்கிய பேபி கார்ன், கேப்சிகம் மற்றும் வெங்காயத்தை கிரேவியில் சேர்க்கவும் இறுதியாக பனீர் துண்டுகள் மற்றும் கசூரி வெந்தயம் சேர்த்து 5-7 நிமிடம் வேக வைக்கவும் பேபி கார்ன் பனீர் மசாலா தயார்...! இதை தவா ரொட்டி, நான் அல்லது தந்தூரியுடன் பரிமாறினால் சூப்பராக இருக்கலாம் பேபி கார்னில் நார்ச்சத்து இருப்பதால் உடலுக்கு மிகவும் நல்லது புரோட்டீன் நிறைந்த பனீரும் இதில் சேர்த்து சமைப்பதால் குழந்தைகளுக்கு மதிய உணவாக கொடுக்கலாம்