ஹார்மோன் காரணமாக தலைமுடி பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன உணவு பழக்கவழக்கங்கள், ரசாயனம் பொருட்கள் மூலம் பிரச்சினை ஏற்படலாம் இதை சரி செய்ய வீட்டில் செய்த ஷியா பட்டர் ஹேர் மாஸ்க் போதும் தேவையான பொருட்கள் : தேங்காய் எண்ணெய், ஷியா பட்டர், சோற்றுக்கற்றாழை, உங்களுக்கு பிடித்த எசன்ஷியல் எண்ணெய் ஷியா பட்டர் எடுத்து தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக சேரும் வரை கலக்கவும் பின் சோற்றுக்கற்றாழை சேர்த்து நன்றாக கலந்து விடவும் இப்போது மூன்றும் கலந்து க்ரீம் பதத்தில் இருக்கும் பின் எசன்ஷியல் எண்ணெய் சேர்க்கவும். இது நறுமணத்தையும் அளிக்கும் இந்த கலவையை கூந்தலின் மயிர்க்கால்கள் மற்றும் நுனி வரை தடவி விடவும் இதை தடவி அரை மணி நேரம் கழித்து கூந்தலை அலசி எடுக்கவும்