கருவளையம், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு உள்ளது இதற்காக மார்க்கெட்டில் இன்று நிறைய க்ரீம்கள் விற்பனை செய்யப்படுகிறது கண்களை சுற்றி இருக்கும் கருவளையத்தை வீட்டிலேயே போக்க சில டிப்ஸ்.. உருளைக்கிழங்கை அரைத்து அந்த சாற்றை, காட்டனில் நனைத்து, அதனை கண்களைச் சுற்றி தடவலாம் தக்காளி ஜூஸை, சிறிது புதினா சேர்த்து குடித்து வரலாம் சோற்றுகற்றாழையின் ஜெல்லை எடுத்து கண்களுக்கு அடியில் மசாஜ் செய்யலாம் சுத்தமான தேங்காய் எண்ணெயை பஞ்சில் தொட்டு கண்ணுக்கு அடியில் மசாஜ் செய்து வரலாம் வெள்ளரிக்காயை வெட்டி கண்ணில் வைத்துக் கொண்டு ஓய்வு எடுத்தால் கருவளையம் மறையத் தொடங்கும் ரோஸ் வாட்டரை காட்டனில் நனைத்து 15 நிமிடங்கள் கண்களில் வைத்து எடுத்தால் நாளடைவில் கருவளையம் மறையும் பாதாமை சிறிது பாலுடன் சேர்த்து, பேஸ்ட் போல் செய்து, கருவளையம் இருக்கும் இடத்தில் தடவலாம்