மாசு நிறைந்த இடத்தில் உடற்பயிற்சி செய்தால் என்ன ஆகும் தெரியுமா..? மாசுபட்ட சூழலில் உடற்பயிற்சி செய்யும் போது அதிக அளவிலான மாசுக்கள் நம் உடலில் கலக்கின்றன இவற்றில் நிறைந்துள்ள நச்சுப்புகை நுரையீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் இதனால் சுவாசப் பிரச்சினைகளும் ஏற்படலாம் இவ்வாறு செய்வதால் நைட்ரஜன் டை ஆக்சைடு, ஓசோன் உள்ளிட்டவை உடலில் கலக்கலாம் இதனால் இருமல், மூச்சுத்திணறல் போன்றவை ஏற்படலாம் மேலும் ஆஸ்துமா மற்றும் வேறு சில சுவாசப் பிரச்சினைகளால் பாதிக்கப்படவும் வாய்ப்பிருக்கிறது இவ்வாறு மாசு நிறைந்த காற்றை சுவாசிப்பதால் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் பிரச்னைகள் வரலாம் நோய் எதிர்ப்பு சக்தி வலுவிழக்கும் போது தொற்றுகளால் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது சூரியன் உதித்த பிறகு இது போன்ற உடற்பயிற்சிகளில் ஈடுபடலாம் என்றும் கூறப்படுகிறது