இரவு உணவை 7 மணிக்கு முன் சாப்பிடுவது நல்லது. இரவு சாப்பாடு சாப்பிட்ட பிறகு இனிப்பு சாப்பிடலாமா என கேள்வி எழலாம். மாலை 6 மணிக்கு பிறகு காபி, டீ, ஐஸ் க்ரீம், இனிப்பு வகைகள் உள்ளிட்டவற்றை சாப்பிட கூடாது. 2019-ம் ஆண்டில் ஐரோப்பாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அதிக சர்க்கரை,இனிப்பு சாப்பிடுவது இதயத்திற்கு கேடு என்று தெரிவித்துள்ளது. சாப்பிட்ட பிறகு, ஐஸ் க்ரீம், சாக்லேட், பேக் செய்த கேக் வகைகள் சாப்பிட கூடாது. அதிகமாக சர்க்கரை சாப்பிடுவது டை-2 நீரிழிவு நோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் என்கிறது மருத்துவ உலகம். அதிகமாக இனிப்பி/ சர்க்கரை சாப்பிட்டால் உடல் பருமன் ஏற்பட்டலாம். அதிகமாக சர்க்கரை சாப்பிடுவது ஸ்ரெஸ் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். டயட்டில் அதிகமாக சர்க்கரை சாப்பிடுது இரத்ததில் சர்க்கரை அளவை அதிகரிக்கும். அளவோடு இனிப்பு சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.