இது தெரிஞ்சா இனி கழிவறையில் ஸ்மார்ட்போன்களை யூஸ் பண்ண மாட்டீங்க!



சமீபத்திய அறிக்கையின் படி 10-ல் 6 நபர்கள் கழிவறைக்கு செல்லும் போது ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதாக ஒப்புக்கொண்டுள்ளனர்



இளம் வயதினரில் 61.6% பேர் கழிவறையில், ட்விட்டர், பேஸ்புக் ஆகியவற்றை பயன்படுத்துவதாக ஒப்புக் கொண்டுள்ளனர்



நீங்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களே பாக்டீரியாக்களின் புகலிடமாக மாறிவிடுகின்றன



கழிவறையில் உள்ள கிருமிகள் ஸ்மார்ட்போன்களின் மேற்பரப்புகளில் ஒட்டிக் கொள்ளும் அபாயம் உள்ளது



மேற்பரப்பில் வாழும் பாக்டீரியாக்கள் 28 நாட்கள் வரை உயிரோடு இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன



டச் ஸ்க்ரீன்களில் பல்வேறு நோய் தொற்றுக்களை உண்டாக்கக்கூடிய கிருமிகளும் வாழ்ந்து வருவதாக கூறுகின்றனர்



இந்த கிருமிகள் சிறுநீர் பாதையில் நோய் தொற்று, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, சரும பாதிப்புகள் போன்ற பல்வேறு உடல் பாதைகளை ஏற்படுத்தலாம்



உங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனில் கழிவறைக்கு செல்லும் போது ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது



ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி இயர்பட்ஸ் போன்ற வேறு பல கேட்ஜெட்டுகளை பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்