பெண்களிடையே அதிகரிக்கும் தைராய்டு பிரச்சனை; ஏன் ஏற்படுகிறது?

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: pexels

தைராய்டு என்பது நம் தொண்டையின் முன் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய சுரப்பி ஆகும்.

Image Source: pexels

உடல் வளர்சிதை மாற்றம், ஹார்மோன் சமநிலை மற்றும் எடை கட்டுப்பாடு போன்ற பல முக்கியமான விஷயங்களை இது கட்டுப்படுத்துகிறது.

Image Source: pexels

ஆனால் தற்காலத்தில் தைராய்டு பிரச்சனை, ஆண்களை விட பெண்களுக்கு 8 முதல் 10 மடங்கு அதிகமாகக் காணப்படுகிறது.

Image Source: pexels

ஏன் இப்படி நடக்குது, அதுக்கு என்னென்ன காரணங்கள்?

Image Source: pexels

பெண்களில் மாதவிடாய், கர்ப்பம் மற்றும் மாதவிடாய் நிறுத்த காலத்தில் ஹார்மோன்கள் தொடர்ந்து மாறுகின்றன.

Image Source: pexels

இந்த மாற்றங்களின் காரணமாக தைராய்டு சுரப்பியில் பாதிப்பு ஏற்படலாம்.

Image Source: pexels

குடும்பத்தில் அம்மா அல்லது சகோதரி போன்ற யாருக்கேனும் தைராய்டு இருந்தால், ஒரு பெண்ணுக்கு இது வருவதற்கான வாய்ப்பு கணிசமாக அதிகரிக்கிறது.

Image Source: pexels

மேலும் அயோடின் குறைபாடு காரணமாக சுரப்பி சரியாக வேலை செய்யாது.

Image Source: pexels

மேலும், தொடர்ச்சியான மன அழுத்தம் காரணமாக உடலில் கார்டிசோல் ஹார்மோன் அதிகரிக்கிறது, இது தைராய்டு ஹார்மோன்களின் சமநிலையை சீர்குலைக்கிறது.

Image Source: pexels