டஸ்ட் அலர்ஜி ஏன் ஏற்படுகிறது? அதை தடுக்க என்ன செய்ய வேண்டும்?

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: pexels

தூசியால் தும்மல் வருதல், மூக்கில் அரிப்பு ஏற்படுதல் மற்றும் கண்களில் அரிப்பு ஏற்படுதல் தூசி ஒவ்வாமையின் அறிகுறிகளாகும்.

Image Source: pexels

தூசி ஒவ்வாமை பொதுவாக தூசியில் உள்ள தூசிப் பூச்சிகளால் ஏற்படுகின்றன.

Image Source: pexels

இந்த துகள்கள் சுவாசத்துடன் ஒருவரின் உடலில் செல்கின்றன.

Image Source: pexels

உங்கள் உடல் இவற்றை தீங்கு விளைவிக்கும் பொருட்களாக கருதி இவற்றுக்கு எதிராக எதிர்வினையாற்றுகிறது.

Image Source: pexels

இந்த எதிர்வினையின் காரணமாக உடல் ஹிஸ்டமின் போன்ற ரசாயனங்களை வெளியிடுகிறது.

Image Source: pexels

இதனால் தும்மல் வருதல், கண்கள் எரிச்சல், மூக்கு ஒழுகுதல் மற்றும் கண்களில் அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

Image Source: pexels

இதை தவிர்க்க வீட்டில் வழக்கமாக சுத்தமாக வைத்திருங்கள்.

Image Source: pexels

வீட்டில் அதிக ஈரப்பதம் உருவாக விடாதீர்கள். ஈரப்பதம் உருவாவதால் டஸ்ட் மைட்ஸ் சுறுசுறுப்பாகிவிடும்

Image Source: pexels

தூசியுடன் தொடர்பு கொண்டவுடன் இந்த அறிகுறிகள் உடனடியாக தீவிரமானால் மருத்துவரை அணுகுவது சிறந்தது.

Image Source: pexels