மூலம் வருவதற்கான முக்கிய காரணங்கள் இவை தான் - கண்டுக்கலனா கஷ்டம் தான்..!

Published by: குலசேகரன் முனிரத்தினம்

மலச்சிக்கல் இருந்தால் மூல நோய் வரும். மலம் இறுகி அழுத்தம் ஏற்படும். இதனால் அந்தப் பகுதியில் உள்ள ரத்த நாளங்கள் வீங்கி மூல நோய் பிரச்சனை வரும்.

பழங்கள் காய்கறிகள் கொட்டைகள் போன்ற நார்ச்சத்து உணவுகளை குறைவாக உட்கொண்டால் செரிமானம் சரியாக நடக்காது. இதன் காரணமாக மலச்சிக்கல் அதிகரித்து மூலம் வரும்.

அலுவலக வேலை அல்லது தொடர்ந்து உட்கார்ந்திருப்பதால் முதுகு பகுதியில் அழுத்தம் அதிகரித்து மூல நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.

போதுமான தண்ணீர் குடிக்கவில்லை என்றால் மலம் இறுகிவிடும். இதனால் கழிவறைக்கு செல்லும் போது அழுத்தம் அதிகரித்து மூல நோய் வரலாம்.

உடல் பருமன் கொண்டவர்களில் மூல நோய் அதிகமாகக் காணப்படுகிறது. உடல் எடை அதிகமாக இருப்பதால் ரத்த நாளங்களில் அழுத்தம் அதிகரித்து தொந்தரவு ஏற்படுகிறது.

கர்ப்பிணிகளில் கர்ப்பப்பை அழுத்தம் காரணமாக ரத்த நாளங்கள் வீங்கும். அதனால் கர்ப்ப காலத்தில் பலர் மூல நோய் பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள்.

அதிக காரமான உணவுகள் மற்றும் துரித உணவுகளை அதிகமாக சாப்பிடுவதால் செரிமான பிரச்சனைகள் அதிகரித்து மூலம் நோய்க்கு வழிவகுக்கும்.

உடல் உழைப்பு இல்லையென்றால் ஜீரண சக்தி குறைந்துவிடும். இதனால் மலச்சிக்கல் அதிகரித்து மூல நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.

அதிக எடை தூக்கும் வேலைகளைச் செய்வதால் அடிவயிற்றில் அழுத்தம் அதிகரித்து ஆசனவாய்ப் பகுதியில் உள்ள ரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்படுகிறது.

கைபேசி பார்த்துக் கொண்டோ அல்லது செய்தித்தாள் படித்துக் கொண்டோ கழிவறையில் அதிக நேரம் உட்காருவதால் மன அழுத்தம் அதிகரித்து மூல நோய் வரும் அபாயம் உள்ளது.

இந்தப் பிரச்சினைகளை நீங்கள் கண்டறிந்தால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுங்கள். இல்லையென்றால் நிலைமை மேலும் மோசமடையும்.