உடலில் கொழுப்பு அதிகரிக்க முக்கிய காரணங்கள் இவைதானாம்..!
Published by: குலசேகரன் முனிரத்தினம்
பிட்சா, பர்கர்கள், வறுத்த உணவுகள், பேக்கரி பொருட்களில் டிரான்ஸ் கொழுப்பு அதிகமாக இருக்கும். இவை கெட்ட கொழுப்பை அதிகரித்து இதய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
தினசரி உடற்பயிற்சி இல்லாமல் உட்கார்ந்தபடியான வாழ்க்கை முறை காரணமாக உடலில் கொழுப்பு சேர்கிறது.
உடல் எடை அதிகமாக உள்ளவர்களுக்கு கெட்ட கொழுப்பு அதிகமாக இருக்கும் வாய்ப்பு அதிகம். குறிப்பாக, வயிற்றில் கொழுப்பு அதிகரிப்பது ஆபத்தானது.
சிகரெட் குடிப்பதால் நல்ல கொலஸ்ட்ரால் (HDL) குறையும். ரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு இதய சம்பந்தமான பிரச்சனைகள் அதிகரிக்கும்.
அதிகமாக மது அருந்துவதால் டிரைகிளிசரைடுகள் அதிகரித்து கொலஸ்ட்ரால் சமநிலையற்றதாகிறது.
எப்போதும் டென்ஷனில் இருப்பதால் ஹார்மோன்களின் தாக்கத்தால் உடலில் கெட்ட கொழுப்பு அளவுகள் அதிகரிக்கலாம்.
குடும்பத்தில் யாருக்கேனும் கொலஸ்ட்ரால் பிரச்சனை இருந்தால்.. பரம்பரையாக மற்றவர்களுக்கும் வர வாய்ப்புகள் உண்டு.
சாஃப்ட் ட்ரிங்க்ஸ், இனிப்புகள் மற்றும் அடைக்கப்பட்ட உணவுகளை அதிகமாக உட்கொண்டால் ட்ரைகிளிசரைடுகள் அதிகரித்து கொழுப்புச் சிக்கலுக்கு வழிவகுக்கும்.
வயது ஏற ஏற உடல் வளர்சி குறையும். இதனால் கொலஸ்ட்ரால் அளவுகள் கட்டுப்பாட்டை மீறும் வாய்ப்பு உள்ளது.
சர்க்கரை நோய் தைராய்டு கல்லீரல் பிரச்சனைகள் உள்ளவர்களுக்கும் கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம்.