முடி வளர்ச்சியில் வெங்காயம் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது.
கூந்தல் வளர்ச்சிக்குத் தேவையான பயோட்டீன் வெங்காயத்தில் உள்ளது.
கூந்தலை வலிமையாகவும் அடர்த்தியாகவும் மாற்ற வெங்காயத்தின் சாறு உதவுகிறது என்று சிலர் கருதுகின்றனர்.
வெங்காய சாறு பயன்படுத்துவதற்கு முன் அதன் நன்மைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தெரிந்து கொள்வது அவசியம்.
வெங்காய சாறு முடியின் வேர்களை வலுப்படுத்த உதவும்.
கூந்தல் வளர்ச்சியைத் தூண்டுவதற்கான வேர்க்கால்களுக்கு ஊட்டமளிக்கிறது.
கூந்தல் உதிர்வு பிரச்சினையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
வெங்காய சாறு உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
வெங்காய சாறு சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.
வெங்காய சாறு தேய்த்தால் உடனடியாக அலசிவிட வேண்டாம். நீண்ட நேரம் இருந்தால் தலைவலியை ஏற்படுத்தும்.