உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைக்க வழி!

Published by: பேச்சி ஆவுடையப்பன்

உடல் கொழுப்பைக் குறைக்க எளிய வழி உணவு மற்றும் உடற்பயிற்சியை நாம் பின்பற்றலாம்.

சிறு வயதிலேயே சர்க்கரை நோய், இன்சுலின் எதிர்ப்பு, இதய நோய்கள் போன்றவை அதிகரித்து வருகின்றன.

எடை குறைந்தால் கிட்டத்தட்ட பாதி பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

இதற்காக அதிக நார்சத்து உணவுகளை உண்ணுங்கள். இதனால் நீண்ட நேரம் வரை பசி எடுக்காது.

அதிக நார்ச்சத்து உணவுகளை உண்பதன் மூலம் உடலுக்கு தேவையான சக்தி கிடைக்கும். கொழுப்பு சேராது.

தண்ணீரில் ஒரு தேக்கரண்டி இலவங்கப்பட்டை தூள் சேர்த்து குடிக்கவும். இதன் தேநீராகவும் அருந்தலாம்.

வெள்ளரிக்காய் உண்பது உடலை நச்சுத்தன்மையில் இருந்து பாதுகாக்கிறது

உங்கள் உணவில் தானியங்களுக்கு பதிலாக கீரைகள் மற்றும் பழங்களைச் சேர்க்கவும். இவை எடை குறைக்க உதவும்.

உடல்நல பிரச்னைகள் இருப்பவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பின் இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.