வெங்காயத்தை யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்?

Published by: பேச்சி ஆவுடையப்பன்

வெங்காயத்தில் உள்ள குர்செடின் மற்றும் சல்பர் கெட்ட கொழுப்பு, இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது

வெங்காயத்தில் உள்ள ப்ரீபயாடிக் செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது.

வெங்காயத்தை தவறாமல் உட்கொள்வது வயிறு மற்றும் பெருங்குடல் புற்றுநோய் வரும் அபாயத்தை குறைக்கலாம்.

வயிறு பிரச்னை உள்ளவர்களுக்கு பச்சை வெங்காயம் வாயு, வீக்கம், செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

நெஞ்செரிச்சல் அடிக்கடி ஏற்படுபவர்களுக்கு பச்சை வெங்காயம் நல்லதல்ல

டைரமைன் மூலப்பொருள் தலைவலி அல்லது ஒற்றைத் தலைவலி பிரச்சனையை அதிகரிக்கும்.

வெங்காயத்தால் அலர்ஜி ஏற்பட்டால் சரும பிரச்னைகள் இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும்

உடல்நல பாதிப்பு இல்லாதவர்கள் மதிய உணவில் இரண்டு நறுக்கிய பச்சை வெங்காயம் சாப்பிடுவது நல்லது.

பச்சை வெங்காயம் பிடிக்கவில்லை என்றால் அதை சமைத்து சாப்பிடலாம்

உடல்நல பிரச்னை இருப்பவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பின் எடுத்துக் கொள்ளலாம்.