இரவில் பீர் குடித்தால் இத்தனை பிரச்சினைகள் வருமா? உஷார்!

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

பீர் குடித்தால் சீக்கிரம் தூக்கம் வருவதுபோல் தோன்றினாலும் இடையில் விழிப்பு வருவதால் ஆழ்ந்த உறக்கம் குறையும்.

பீரில் கலோரி அதிகம். இரவில் குடிப்பதால் வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேரலாம்.

அடிக்கடி பீர் அருந்துவதால் கல்லீரலில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

மது அருந்தினால் உடலில் நீர்ச்சத்து குறையும். அதனால் காலையில் சோர்வு மற்றும் தலைவலி ஏற்படலாம்.

இரவில் பீர் குடித்தால் வாயு, அமிலத்தன்மை, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

அதிக அளவில் பீர் அருந்துவதால் இரத்த அழுத்தம் அதிகரிக்கும் மற்றும் இதய ஆரோக்கியம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

தொடர்ச்சியாக மது அருந்துவதால் பதட்டம், மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு அறிகுறிகள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

பீர் சிறுநீர் கழிப்பை அதிகரிக்கும். இதன் காரணமாக தூக்கத்தில் அடிக்கடி கழிவறைக்கு செல்ல வேண்டியிருக்கும்.

இரவு தாமதமாக பீர் குடித்தால் செரிமானம் சரியாக நடக்காமல் வயிறு உப்பசம் ஏற்படலாம்.

தினமும் இரவு பீர் குடிக்கும் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் மதுவை நம்பியிருக்கும் நிலைக்கு வழிவகுக்கும் என்பதால், கவனமாக இருக்க வேண்டியது முக்கியம்.