மாதவிடாய் காலத்தில் வாழைப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் தசைகளின் அழுத்தத்தை குறைக்கிறது. இதனால் பிடிப்பு ஓரளவு குறையும்.

மாதவிடாய் காலத்தில் சோர்வு அதிகமாக இருக்கும். இவை உடனடியாக சக்தியை அளிக்கும்.

வாழைப்பழத்தில் வைட்டமின் B6 உள்ளது. இது செரோடோனின் உற்பத்தியை அதிகரித்து மனநிலையை மேம்படுத்துகிறது.

வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் உடலில் நீர் தேக்கத்தை குறைத்து வீக்கத்தை குறைக்க உதவுகிறது.

நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் மலச்சிக்கல் குறையும். மாதவிடாய் காலத்தில் செரிமான பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு இது நன்மை பயக்கும்.

வாழைப்பழத்தில் இரும்புச்சத்து சிறிதளவு உள்ளது. இது இரத்த சோகை பிரச்சனையை குறைக்க உதவுகிறது.

வாழைப்பழத்தில் டிரிப்டோபான் என்ற பொருள் உள்ளது. இது ரிலாக்ஸாக உணர உதவுகிறது.

மாதவிடாய் காலத்தில் சோர்வு அதிகமாக இருந்தால் வாழைப்பழம் சாப்பிடுவதால் சிறிது நிவாரணம் கிடைக்கும்.

மெக்னீசியம் தசைகளை தளர்த்துகிறது. இதன் மூலம் இரவில் அமைதியாக தூங்க உதவுகிறது.

மாதவிடாய் காலத்தில் சிலருக்கு வாயு மற்றும் அமிலத்தன்மை பிரச்சனைகள் ஏற்படும். வாழைப்பழம் வயிற்று வலிக்கு நிவாரணம் அளிக்கும்.