மனிதன் உயிர் வாழ மூளை மிக மிக அவசியம் ஆகும். இதில் சிறிய குறைபாடு இருந்தாலும் உயிருக்கே ஆபத்து ஆகும்.

Published by: சுகுமாறன்
Image Source: Pexels

மூளையில் ஒரு அசாதாரண செல் வளர்ச்சியே இந்த மூளை கட்டி ஆகும். இதை தொடக்க கட்டத்திலே சரி செய்யாவிட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படும்.

Image Source: freepik

மூளையில் உள்ள செல்கள் கட்டுப்பாடின்றி அசாதாரணமாக வளரும்போது இந்த பிரச்சினை உண்டாகிறது. இது நமது இயல்பு வாழ்வை பாதிக்கும்.

Image Source: freepik

நீங்கள் கவனிக்க வேண்டிய எச்சரிக்கை அறிகுறிகள்

மூளையில் கட்டி உருவானால் என்னென்ன பாதிப்பு ஏற்படும் என்பதை கீழே விரிவாக காணலாம்.

Image Source: freepik

தொடர் தலைவலி

தொடர்ச்சியான தலைவலி இருப்பது மூளையில் கட்டி இருப்பதற்கான முதல் அறிகுறியாகும்.

Image Source: freepik

மங்கலான பார்வை

மூளையில் கட்டி இருந்தால் பார்வையில் குறைபாடு இருக்கலாம். பார்வை மங்கலாகும். கண்களை ஒரே இடத்தில் உற்றுநோக்கி பார்ப்பதில் சிக்கல் இருக்கும்.

Image Source: Pexels

நினைவாற்றல் இழப்பு

ஞாபக மறதி உண்டாகும். எந்த ஒரு விஷயத்தையும் முழு கவனத்தையும் செலுத்த இயலாது.

Image Source: freepik

கை, கால்களில் பலவீனம், மரத்துப்போன உணர்வு

கை மற்றும் கால்கள் பலவீனமாக மாறும். சில நேரங்களில் கை, கால்கள் மரத்துப்போன உணர்வு ஏற்படும்.

Image Source: freepik

வாந்தி

தலைவலி மட்டுமின்றி குமட்டலும், வாந்தியும் அவ்வப்போது ஏற்படும். இது நம்மை மிகவும் பலவீனமாக்கும்.

Image Source: freepik

கோபமும், எரிச்சலும்:

மூளையில் ஏற்படும் கட்டி காரணமாக கோபம், எரிச்சல் போன்ற உணர்வுகள் அடிக்கடி உண்டாகும்.

Image Source: freepik

தும்மும்போது தலைவலி

நீங்கள் முன்னோக்கி உங்கள் உடலை வளைத்தாலே, தும்மினாலோ அல்லது இருமினாலோ கடுமையான தலைவலி உண்டாகும். இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது மிக மிக அவசியம்.

Image Source: freepik