உட்கார்ந்து கொண்டே இருப்பவரா.. இத்தனை பிரச்சினைகள் ஏற்படுமா?

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: pexels

இன்றைய நவீன வாழ்க்கை முறையில் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்வது மிகவும் சாதாரணமாகிவிட்டது.

Image Source: pexels

ஆனால் உங்களுக்குத் தெரியுமா நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது உங்கள் உடலுக்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கும்?

Image Source: pexels

தொடர்ந்து உட்கார்ந்திருப்பதால் முதுகுத்தண்டில் அழுத்தம் அதிகரித்து, டிஸ்க் விலகல் மற்றும் முதுகு வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

Image Source: pexels

மேலும் குனிந்து வேலை செய்வதால் கழுத்து மற்றும் தோள்பட்டை தசைகளில் இறுக்கம் ஏற்படுகிறது.

Image Source: pexels

நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது கலோரிகளை எரிப்பதை குறைக்கிறது, இதன் விளைவாக உடல் எடை அதிகரிக்கிறது.

Image Source: pexels

இதற்கு மேலாக நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது இரத்த ஓட்டத்தை குறைக்கிறது மற்றும் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது.

Image Source: pexels

அதிக நேரம் உட்கார்ந்திருப்பது உடலின் இன்சுலின் செயல்பாட்டைக் குறைக்கிறது, இதன் காரணமாக சர்க்கரை அளவு அதிகரிக்கக்கூடும்.

Image Source: pexels

சும்மா உட்கார்ந்திருப்பதால் வயிற்றில் அழுத்தம் ஏற்பட்டு வாயு, அஜீரணம் போன்ற பிரச்சனைகள் உண்டாகின்றன.

Image Source: pexels

மேலும், கால்களில் இரத்த ஓட்டம் குறைவதால், வெரிகோஸ் நரம்புகள் மற்றும் வீக்கம் ஏற்படலாம்.

Image Source: pexels