கோடைகாலங்களில் பலருக்கும் இது ஏற்படுகிறது. வியர்க்குரு போன்று கால்களிலும் ஏற்படுகிறது. சிவப்பாக இருப்பர்களுக்கு சிவப்பு புள்ளியாக இருக்கிறது.
ஸ்ட்ராபெர்ரி கால்கள் என்பது தோலில் காணப்படும் சிறிய கரும்புள்ளிகள் ஆகும். ஸ்ட்ராபெர்ரியின் மேற்புற தோற்றம் போல இருக்கும். முடிகளை அகற்றிய பிறகு இதுபோன்று இருக்கும்.
ஸ்ட்ராபெர்ரி கால்களுக்கு முக்கியமான காரணம் கால்களில் உள்ளே வளரும் முடிகள். முடி மீண்டும் தோலுக்குள் செல்லும்போது புடைப்புகள் ஏற்பட்டு இவ்வாறு ஏற்படுகிறது.
முறையாக ஷேவிங் செய்யாதபோது, வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு இதுபோன்று ஏற்படுகிறது. ஈரப்பதம் குறைவு காரணமாகவும் உண்டாகிறது.
சுருண்ட மற்றும் அடர்த்தியான முடி கொண்டவர்கள் இதை எதிர்கொள்கின்றனர். சரியான ஷேவிங் முறையே ஸ்ட்ராபெர்ரி கால்களில் இருந்து பாதுகாக்கும்.
குளோரின் கலந்த நீரில் கலப்பதால் சருமம் வறண்டு போகிறது. இதனால், எரிச்சல், தொற்று அபாயம் ஏற்படுகிறது.
தோலில் செல்கள், வியர்வை மற்றும் அழுக்குகள் முடிகளின் வேர்க்கால்களை அடைத்து கரும்புள்ளி அல்லது அடர்புள்ளிகளை ஏற்படுத்துகிறது.
சருமத்தின் ஈரப்பதத்தையும், மென்மையையும் பராமரிக்க வேண்டியது அவசியம் ஆகும். தோல் பராமரிப்பு முறைகள் அவசியம்.
உங்களுக்கு ஸ்ட்ராபெர்ரி கால்கள் குறித்து தக்க ஆலோசனையும், சிகிச்சையும் தேவையென்றால் மருத்துவரை அணுகலாம்.
கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல் பொது தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோய் கண்டறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றாக இல்லை. மருத்துவ நிலைமை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், தகுதிவாய்ந்த மருத்துவரின் ஆலோசனையைப் பெறவும்.