தூக்கமின்மையால் உடலில் மன அழுத்த ஹார்மோன்கள் அதிகரிக்கின்றன.

இதன் காரணமாக ரத்த அழுத்தம் அதிகமாகிறது.

குறைவான தூக்கம், உடலின் இன்சுலின் உணர்திறனை பாதிக்கிறது.

இதன் காரணமாக, உடலின் குளுக்கோஸ் அளவு கட்டுப்பாடில்லாமல் போய்விடுகிறது. இது நேரடியாக நீரிழிவு நோய் அபாயத்தை அதிகரிக்கிறது.

போதுமான தூக்கம் இல்லாததால், பசியை கட்டுப்படுத்தும் ஹார்மோன்களான லெப்டின் மற்றும் கிரெலின் சீர்குலைந்துவிடும்.

ஹார்மோன்கள் சமநிலையற்றதாக மாறுவதால், பொரித்த மற்றும் அதிக கலோரி உணவு உண்ணும் ஆசை அதிகரிக்கிறது.

ஓய்வின்மை, உடலின் தீங்கு விளைவிக்கும் கிருமிகள் மற்றும் வைரஸ்களை எதிர்த்துப் போராடும் திறனை குறைக்கிறது.

போதுமான தூக்கம் இல்லாததால், மனநிலை மாற்றங்கள் மற்றும் மனச்சோர்வு போன்ற மனநலப் பிரச்னைகளின் ஆபத்து அதிகரிக்கிறது.

தூக்கம் முழுமையடையாதபோது மறதி நோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.

இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வெறும் தகவலுக்காகவே தரப்பட்டுள்ளன.