தினமும் ஒரு கரண்டி தேன் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளை காணலாம்.
தேன் பண்டைய காலத்தில் இருந்தே சுவையான, இயற்கையான மற்றும் ஆரோக்கியமான மருந்தாக இருந்துள்ளது.
தேன் தினசரி சாப்பிடுவதால் உடலுக்கு நன்மை உண்டாகும்.
தேன் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
தேனும் பனங்கற்கண்டும் சேர்த்து சாப்பிட்டால் தொண்டை வலி, இருமல், சளிக்கு தீர்வு கிடைக்கும்.
தேனில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நம் உடலுக்கு ஒரு கேடயம் போல் செயல்பட்டு நோய்களில் இருந்து நம்மைப் பாதுகாக்கின்றன
தேன் தினசரி சாப்பிடுவதால் உடலை நச்சுத்தன்மையிலிருந்து நீக்கி உள்ளிருந்து சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது
தினமும் தேன் சாப்பிடுவதால் இதயம் மிகவும் ஆரோக்கியம் அடையும்.
தேன் தினசரி சாப்பிடுவதால் சரும பராமரிப்பிற்கும், ஆரோக்கியத்திற்கும் மிகுந்த நன்மை கிடைக்கும்.