இது கோடை காலம் என்பதால் பலரும் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினை சருமம் கருப்பாக மாறுவது.
வெள்ளரிக்காயையும், ரோஸ் வாட்டரையும் சேர்த்து முகத்தை கழுவினால் முகம் பொலிவு பெறும்.
சருமத்தை பொலிவு பெறச் செய்வதில் கடலை மாவு பங்கு அளப்பரியது. பாலில் கடலை மாவை கலந்து முகத்திற்கு பூசினால் முகம் பொலிவு பெறும்.
கோடை காலத்தில் சருமத்தை பராமரிப்பில் கற்றாழை முக்கிய பங்கு வகிக்கிறது. கற்றாழையை சாப்பிடுவதும், அதை முகத்தில் தேய்ப்பதும் நல்ல பொலிவை உண்டாக்கும்.
உருளைக்கிழங்கு சாறு முகத்தை பொலிவு பெறச்செய்யும் ஆற்றல் கொண்டது. கரும்புள்ளிகள், கருமைகளை அகற்றும்.
காபித்தூள் மற்றும் தேங்காய் எண்ணெய் கலந்த கலவை சருமத்தை சுத்தம் செய்து இறந்த செல்களை நீக்குகிறது.
ஈரப்பதத்தை தக்கவைக்கும் நிறமாற்றத்தை உண்டாக்கும் தக்காளியும் சேர்ந்து சருமத்தை பொலிவாக்கும்.
இறந்த செல்களை அகற்றி சருமத்தை பளபளவென மாற்றுவதில் இது முக்கிய பங்காற்றுகிறது.
தோலை குளிர்ச்சியாக்கி கருமையை நீக்கி சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கும் ஆற்றல் இந்த சந்தனத்திற்கும், ரோஸ் வாட்டருக்கும் உண்டு.